தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி
தாளவாடி அருகே யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-20 08:59 GMT
தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளம்மா (70), இவர் அந்த வழியாக நடந்து சென்ற போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்கியதில் உயிரிழந்தார். பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சென்ற தாளவாடி வனத்துறை மற்றும் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் பட்டப்பகலில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.