உலக எய்ட்ஸ் தின விழா

உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விழா நடந்தது.

Update: 2023-12-01 16:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலகஎய்ட்ஸ்தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று உறுதி மொழியேற்பு, விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதனை கலெக்டர் கார்மேகம், தொடங்கி வைத்து பேசியதாது: ஒவ்வொரு ஆண்டும் டிச. 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு "சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள நம்பிக்கை மையங்கள் மூலம் கடந்த டிசம்பர் முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை 2,19,281 நபர்கள் எச்.ஐ.வி பரிசோதனை, ஆலோசனை பெற்றுள்ளனர். மேலும் சுகவாழ்வு மையங்கள் மூலமாக 69,078 நபர்களுக்கு பால்வினை பரிசோதனை செய்யப்பட்டு அதில் 3,885 நபர்களுக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 9,841 நபர்கள் இலவச கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள். மாவட்டத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 798 குழந்தைகளுக்கு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளை வாயிலாக கல்வி உதவித் தொகையாக ரூ.26,34,000 வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் சௌண்டம்மாள், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் வளர்மதி,துணை இயக்குநர் கணபதி, மாநகர நல அலுவலர் யோகனந், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கமாவட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News