மஞ்சள் பை வழங்கும் இயந்திரம்: பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அமைச்சர்

மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மதிவேந்தன் கொண்டு வந்தார்.

Update: 2024-02-11 11:15 GMT

மஞ்சள் பை வழங்கும் இயந்திரம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உழவர் சந்தையில் நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ 80 ஆயிரம் மதிப்பில் துணிப்பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்குவழங்கும் விழா உழவர் சந்தை வளாகத்தில் நடைபெற்றதுநாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,மாவட்ட ச மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர்நகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இத்தனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

Tags:    

Similar News