கோதண்டராமருக்கு யோக நரசிம்மர் அலங்கார உற்சவம்

கோதண்ட ராமர் கோவிலில் உற்சவமூர்த்தி ராமருக்கு சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

Update: 2024-04-21 09:00 GMT

வீதி உலா

வேலூரை அடுத்த ரங்காபுரம் கோதண்ட ராமர் கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று இரவு நடந்த உற்சவத்தில், உற்சவமூர்த்தி ராமருக்கு சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை, விஜயலட்சுமி அருணாசலம் குடும்பத்தினர், வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் எம்.ஏ.கணேஷ் சங்கர், ஜி.நந்தினி, காதம்பரி, யாதனா ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News