எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்ந்த சட்டக் கல்லூரிகளில் எல்எல் பி ( ஹானர்ஸ் ) சட்ட படிப்பிற்கு இன்று முதல் ஜூலை 24ஆம் தேதி மாலை 5:45 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 05:11 GMT

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் 3 ஆண்டு எல்எல் பி ( மேன்மை ) சட்ட படிப்பிற்கு இன்று  முதல் ஜூலை 24ஆம் தேதி மாலை 5:45 மணி வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in இன்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News