ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 13:17 GMT

ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹஜ் பயணம் மேற் கொள்ள இஸ்லாமியர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர் குணங்குடி அனிபா கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகிற 2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்களிடமிருந்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் கமிட்டி விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.

விண்ணப்பிக்க வருகிற 20- ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் ஆன் லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் www.hajcommittee.gov.in "HAJ SUVIDHA" செயலியை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். விண்ணப்ப படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை நிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத்தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் போல், தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற் கொள்ளலாம் என்ற விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் வருகிற 2025 ஜனவரி 31- ஆம் தேதி வரை செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024-க்கான வழி முறைகளை இந்திய ஹஜ்குழு வின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News