ஜெயங்கொண்டம்: கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு 2 நாள் இரவு பகலாக கிடந்தவரை தாபமூர் போலீசார மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Update: 2024-05-08 15:20 GMT
தற்கொலை முயற்சி

. அரியலூர் மாவட்டம் தா பழூர் தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் மதனத்தூர் நீலத்தநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. அந்தப் பாலத்தின் அடியில் நேற்று பகல் நேரத்தில் சில ஆடு மேய்ப்பவர்கள் தங்களது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பாலத்தின் கீழே ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அருகில் சென்று பார்த்த ஆடு மேய்ப்பவர்கள் அவரது மயக்கத்தை தெளிய வைத்து விசாரித்த போது அவர் பாலத்தின் மேலிருந்து தற்கொலை செய்து கொள்வதற்காக கீழே குதித்ததாகவும் ஆனால் மணல் மீது விழுந்ததால் சாகாமல் தப்பித்து விட்டதாகவும் ஆனால் கால்கள் அசைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தான் பாலத்தில் இருந்து குதித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இது குறித்து ஆடு மேய்ப்பவர்கள் தா பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை விசாரித்த போது அந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம், வைத்தியநாதன் பேட்டை, பள்ளர் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் தினேஷ் ( வயது 30) என்றும் அவருக்கு வேலை கிடைக்காத விரக்தியில் கடந்த மே 6ஆம் தேதி இரவு பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து யாரும் இல்லாத நேரத்தில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் உதித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் பாலத்தின் கீழே தண்ணீர் இல்லாததாலும் மணல் பாங்கான இடமாக இருந்ததாலும் அவர் உயிரோடு தப்பித்து விட்டார். ஆனாலும் கால் அசைக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிரிலும் பகல் நேரத்தில் கடும் வெயிலிலும் மணலில் கடும் அவஸ்தை பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாள் அவஸ்தை தனக்கு மரணத்தை விட கடும் கொடுமையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார். அவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் சிகிச்சை பெற்று வீட்டிற்கு செல்வதற்கு வசதியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

Tags:    

Similar News