குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2023-12-03 02:54 GMT
பெண் தற்கொலை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). திருப்பூரில் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி கோமதி (25) என்ற மனைவியும், சர்வேஷ் சித்து (2) என்ற மகனும், சஸ்திகா (2) என்ற மகளும் இருந்தனர். பிரகாஷ் திருப்பூரில் தங்கி நிறுவனத்தை கவனித்து வருகிறார். கோமதி மகன், மகளுடன் இடையப்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர் பிரகாசுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில் நேற்று பிரகாஷ் வீட்டில் இல்லாத போது தனது மகன், மகளுக்கு விஷத்தை கொடுத்தார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோமதி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மயங்கி கிடந்த 2 குழந்தைகளையும் மீட்டு வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சர்வேஷ் சித்து பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. சஸ்திகாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஏத்தாப்பூர் போலீசார் கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News