வள்ளுவர் தெருவில் வாகனத்தை களவாடிய இளைஞர் கைது

கரூர் வள்ளுவர் தெருவில் வாகனத்தை களவாடிய இளைஞரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

Update: 2024-05-01 14:25 GMT

கரூர் வள்ளுவர் தெருவில் வாகனத்தை களவாடிய இளைஞரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.


 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் சென்னியப்பன் முதலியார் மகன் ராமசாமி வயது 63. இவர் ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், வள்ளுவர் தெருவில் உள்ள சி எம் எஸ் எக்ஸ்போர்ட்ஸ் டெக்ஸ் நிறுவனத்தின் முன்பு தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.

பின்னர் தனது பணியை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனம் களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே, இது குறித்து ராமசாமி காவல் நிலையத்தில் தனது டூவீலர் களவாடப்பட்டது குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, கிழக்கூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் சதீஷ் வயது 21 என்பவர் இந்த வாகனத்தை களவாடியது தெரியவந்தது.

உடனடியாக சதீஷை கைது செய்து, களவாடப்பட்ட அந்த வாகனத்தையும் மீட்டனர். களவாடப்பட்ட அந்த வாகனத்தின் மதிப்பு ரூபாய் 7000 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News