காவலரை தாக்கிய வாலிபர் கைது
இருச்சக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய வாலிபர், கண்டித்த காவலரை தாக்கினார்.;
கைது
நீலகிரி மாவட்டம், குன்னூரில், ராம்குமார் (30) என்பவர் ஹில்காப்ஃ பிரிவில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் குன்னூர் ஜோசப் பள்ளி அருகே பணியில் இருந்தபோது, வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (34) என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார்.
காவலர் ராம்குமார் இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அப்போது ராம்குமாருக்கும், சதீஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ்குமார், ராம்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராம்குமார் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து ராம்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மேல் குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.