அடையாளம் தெரியாத வாலிபர் ரயிலில் அடிப்பட்டு பலி
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-06 07:41 GMT
ரயிலில் அடிப்பட்டு பலி
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது வயிற்று பகுதி, வலது கையில் மச்சங்கள் உள்ளன. வெள்ளை நிறத்தில் சட்டை, கருப்பு கலரில் பேண்ட் அணிந்து உள்ளார். அடையாளம் தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் அடிபட்டு இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.