மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் பயிலரங்கம்

மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் எழும்பூரில் நடைபெற உள்ளது.;

Update: 2024-02-09 16:23 GMT

துரை வைகோ

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழ்நாட்டு அரசியலில் இளைஞர்களை பண்படுத்தவும், நிகழ்கால அரசியலில் அவர்களை பங்குகொள்ள செய்யவும்,

தேர்தல் களத்தில் விழிப்புணர்வுடன் பணியாற்றவும் ம.தி.மு.கழகம் சார்பில், 'இளையோர் தேர்தல் பயிலரங்கம்' எனும் புதுமையான சிறப்பு நிகழ்ச்சியை வருகின்ற 13.02.2024, செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 2 மணியளவில், சென்னை எழும்பூர் சிராஜ் மகாலில் நடத்தப்படுகிறது இந்நிகழ்ச்சியை, கழக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி,

Advertisement

வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, ஆபத்து உதவிகள் அணி, இணையதள அணி உள்ளிட்ட கழகத்தின் இளையோர் படை பிரிவுகள் இணைந்து நடத்துகின்றார்கள் நாடாளுமன்றத் தேர்தல் விரைந்து வர உள்ள நிலையில் கழகத்திற்கு இது மிக முக்கிய நிகழ்வாக அமையும்.

இரண்டாயிரம் இளைஞர்கள் இதில் பங்கேற்க இருக்கிறார்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் புதிய இளைஞர்கள் பயிலரங்க நிகழ்வுக்கான சீருடையுடன் நிகழ்ச்சியில் கட்டாயம் பங்கேற்பதை அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் உறுதிசெய்வதோடு, நிகழ்ச்சி வெற்றிபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Tags:    

Similar News