பிளெக்ஸ் பேனர் விழுந்து இளைஞர் காயம் - அ.தி.மு.கவினர் மீது வழக்கு

ஒரத்தநாடு அருகே எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் விழுந்து இளைஞர் காயமடைந்த சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-01-30 08:13 GMT

பைல் படம் 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சாலையோரங்களில், ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் பெரிய பெரிய அளவில், வைக்கப்பட்டு இருந்தன.  இந்நிலையில், ஒரத்தநாடு அருகே புலவன்காட்டை சேரந்த கபில்தேவ் டூ வீலரில் சென்ற போது, பிளக்ஸ் பேனர் விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஒரத்தநாடு கடைவீதி, யூனியன் அலுவலகம் எதிரே, பேருந்து நிலையம்  என நகரம் முழுவதும் அனுமதியின்றி ஏராளமான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்ததாக, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் பேரூராட்சி தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 15 பேர் மீது ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   இதேபோல, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், வல்லம், செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் அனுமதியின்றி பிளக்ஸ் வைத்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News