விரைவில் வர இருக்கும் 5 புதிய கார்கள்..!

Update: 2024-02-07 06:09 GMT

ஹூண்டாய் க்ரெட்டா என் லைன்:

இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி சுஸுகி முதல் பிரபல ஹூண்டாய் இந்தியா வரை அடுத்த சில மாதங்களுக்குள் 5 புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா என் லைன்:

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் அதன் புதிய N லைன் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. முன்னதாக, ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் வென்யூ சப்-4 மீட்டர் எஸ்யூவியை என்-லைன் வேரியண்டில் அறிமுகப்படுத்தியது. காரின் முன் மற்றும் பின்புறம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஜெனரல் ஸ்விஃப்ட்

புதிய ஸ்விஃப்ட் அதிக எரிபொருள் திறன் கொண்ட புதிய Z சீரிஸ் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் எஞ்சினைப் பெறலாம். இந்த எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் செட்டப்புடன் வழங்கப்படும். இது அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 108 என்எம் பீக் டார்க் திறனையும் உருவாக்கும்.

மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்

புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் ஹெட்லேம்ப் அசெம்பிளியை மீண்டும் டிசைன் செய்யப்பட்ட டிராப்-டவுன் எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகள் இடம் பெற்றிருக்கும். அதே நேரத்தில், காரின் உட்புறத்தில் 10.25 இன்ச் திரை, 360 டிகிரி கேமரா, பின்புற ஏசி வென்ட் மற்றும் புதிய டேஷ்போர்டு டிசைன் இருக்கும்.

டாடா டியாகோ & டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி

இந்தியாவின் முதல் சிஎன்ஜியில் இயங்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. Tiago மற்றும் Tigor ஆகியவை AMT விருப்பத்துடன் CNG -ல் கிடைக்கும்.

2024 ஸ்கோடா ஆக்டேவியா

வரவிருக்கும் அப்டேட் ஸ்கோடா ஆக்டேவியாவில், வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள எஞ்சின் விருப்பங்களை மட்டுமே பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரீமியம் செக்மென்ட் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா, 2024 ஆக்டேவியாவை உலகளவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது

Tags:    

Similar News