புத்தாண்டை ஒட்டி புதிய ரீசார்ஜ் திட்டத்தை போட்டி போட்டு அறிமுகப்படுத்தும் Airtel, jio !!
ஏர்டெல் தனது புதிய ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு உட்பட பல நன்மைகளை வழங்குகிறது
ஏர்டெல் நிறுவனம் ரூ.398 விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் செயலி, இணையதளம் மற்றும் கடைகளில் இந்த ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தில் டேட்டா தவிர பல நன்மைகளை தருகிறது.
ஏர்டெல் எதிரான ரிலையன்ஸ் ஜியோவும் பயனர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. புத்தாண்டை ஒட்டி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
ஏர்டெல்லின் ரூ. 398 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி 5ஜி டேட்டாவை பெற முடியும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புடன் 28 நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 28 நாள் சந்தாவை வழங்குகிறது. ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 3 மாதங்களுக்கு ரூ.149 ஆகும். இதனை இலவசமாக வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டை ஒட்டி ரூ. 2025 விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதில் 200 வேலிடிட்டியுடன் வரம்பற்ற அழைப்பு, தினசரி 500 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை பெற முடியும்.
மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற SMS, JioTV, JioCinema போன்ற பேக்குகள் இடம் பெற்றுள்ளது. இந்த ஆஃபர் டிசம்பர் 11 முதல் ஜனவரி 11 வரை MyJio ஆப்ஸ் மற்றும் ஜியோ இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம்.