BSNL கொண்டுவந்த புதிய ரூ.345 RECHARGE திட்டம்.. 60 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள் ? | கிங் நியூஸ் 24X7

Update: 2025-02-12 10:15 GMT

BSNL

பிஎஸ்என்எல் (BSNl) நிறுவனம் நாட்டில் சில இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிட்டால் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதும் கூட மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. சரி இப்போது பிஎஸ்என்எல் கொண்டுவந்த ரூ345 ப்ரீபெய்ட் திட்டத்தின் (BSNL RS 345 plan) நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 345 Prepaid plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளன. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி தீர்ந்துவிட்டால் 40கேபிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தலாம்.

குறிப்பாக அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை அதிக டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம்.


Tags:    

Similar News