TRAI புதிய விதிகள்...

Update: 2025-01-01 07:05 GMT

trai

புதிய சிம் கார்டு விதிகளின் கீழ் டெலிகாம் துறை (DoT) கடுமையான விதிகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், சைபர் குற்ற சம்பவங்களின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடுபட்டு சேர்த்த பணத்தை ஆன்லைன் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் TRAI முக்கிய நடவடிக்கையை மேற்கண்டுள்ளது.இதன் கீழ் ஆயிரக்கணக்கான எண்கள் முடக்கப்பட்டுள்ளன.

வேறொருவரின் பெயரில் சிம் கார்டை வாங்கி, அதை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க TRAI அதிகாரிகள் தயாராக உள்ளனர். சிம் கார்டுகளை வேறொருவரின் பெயரில் வாங்குபவர்கள் அல்லது மோசடி செய்திகளை அனுப்புபவர்கள் சிக்கலில் சிக்கக்கூடும்.வேறு ஒருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கி மோசடி செய்பவர்களை டிராய் பிளாக் லிஸ்ட் செய்ய முடியும். இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம்.

தடுப்புப்பட்டியலில் உள்ளவர்களின் சிம் கார்டுகள் முடக்கப்பட்டு, ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை புதிய இணைப்பு எடுக்க தடை விதிக்கப்படும். புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் .வாடிக்கையாளர் ஸ்பேம் அழைப்புகள் பெற்றது குறித்து புகார் அளித்தால், தொலைத்தொடர்பு நிறுவனம் சிக்கலைத் தீர்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் TRAI கூறியுள்ளது.

Tags:    

Similar News