Moto G4: ரூ.8 ஆயிரத்திற்கு !!! 8ஜிபி RAM!!!
Moto G04 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது Moto நிறுவனத்தின் மிகவும் தொடக்க நிலை மாடல்களாகும்.இந்த மொபைல் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. Unisoc T606 பிராஸஸர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி வரை இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த மொபைலில் 16MP பின்புற கேமரா உள்ளது. 5MP செல்ஃபி கேமரா இதில் உள்ளது.இந்த மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது. இதில் 15W சார்ஜிங் ஆதரவு உள்ளது.இந்த மொபைல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 102 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக்கை வழங்கும் என்று Moto நிறுவனம் கூறுகிறது.இது டால்பி அட்மாஸ் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களை ஆடியோவிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. Moto G04 போனின் ஆரம்ப விலையை 6,249 ரூபாய் ஆக வைத்துள்ளது.இந்த விலை போனின் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்டிற்கானது. அதே நேரத்தில் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்ட் 7 ஆயிர்து 999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நான்கு வண்ண ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் மற்றும் மோட்ரலா தளத்தில் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.