பிலிப்பைன்சில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு!!

Update: 2025-01-11 06:42 GMT

நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினதுவானில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

Similar News