அமெரிக்காவில் தொடர் சம்பவம் - மர்மமான முறையில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

ஒரே வாரத்தில் 2 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழப்பு.

Update: 2024-04-09 06:45 GMT

உயிரிழப்பு

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் காணாமல் போன முகமது அப்துல் அர்பாத் என்கிற மாணவர் ஓஹியோ நகரில் இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளர்.

கடந்த 5-ம் தேதி உமா சத்ய சாய் என்கிற மாணவரும் ஓஹியோ நகரில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ படித்து வந்த இந்தியரான விவேக் சைனி (25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மர்ம நபர் ஒருவரால் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். 

இதனையடுத்து இதேபோல் நடப்பு ஆண்டில் இந்திய மாணவர் அல்லது இந்தியர் ஒருவர் மரணம் அடைவது இவரோடு சேர்த்து இது 10ஆவது சம்பவம் ஆகும்.

Tags:    

Similar News