இமாச்சலில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் தகுதிநீக்கம்!
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Update: 2024-02-29 09:19 GMT
இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்த நிலையில் அவர்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்து, இனி அந்த 6 பேரும் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர முடியாது என சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா அறிவித்துள்ளார்.
இமாச்சல் பிரதேசத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 40 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்து, 25 வேட்பாளர்களை கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றியடைந்தது காங்கிரஸின் உட்கட்சி பூசலை வெளிச்சம்போட்டுக்காட்டியது.
எனவே மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்த குற்றத்துக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.