பூமியை அழிக்கும் பேரழிவு... மிரட்டும் மீத்தேன் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
பல்வேறு நாடுகளும் இப்போது பல விதமான ஆபத்துகளை எதிர்கொள்ளும் நிலையில், ஒட்டுமொத்த பூமியும் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து குறித்த பரபர அலர்ட் வந்துள்ளது.
இப்போது நாம் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வருகிறோம். ஒரு பக்கம் பார்த்தால் திடீர் திடீரென கடுமையான மழை அல்லது வெயில் வைத்துச் செய்கிறது. மற்றொருபுறம் கொரோனா, எலிக் காய்ச்சல் ஆகியவை பீதியூட்டுகிறது.
ஒரு பிரச்சினையில் இருந்து தப்பி வந்தால் அடுத்த பிரச்சினை.. அதில் இருந்து தப்பினால் அதற்கு அடுத்த சிக்கல் என்று தொடர்ந்து நாம் பல்வேறு பிரச்சினைகளை வரிசையாக எதிர்கொண்டு வருகிறோம். இதில் எந்த நாடும் எளிதாகத் தப்புவதில்லை.
புதைந்துள்ள டைம் பாம்: இந்தச் சூழலில் ஆய்வாளர்கள் ஒட்டுமொத்த பூமியையும் அழிக்கக் கூடிய ஒரு பேராபத்து குறித்து எச்சரித்துள்ளனர். வட துருவமான ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டமான ஸ்வால்பார்ட் என்ற பகுதியில் ஆய்வாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பூமியை அழிக்கும் ஒரு வெடிகுண்டையே கண்டுபிடித்துள்ளனர் என்றே சொல்லாம்.
அங்கே அடியில் பல லட்சம் கன மீட்டர் பரப்பளவில் மீத்தேன் புதைந்து இருக்கிறதாம். இந்த மீத்தேன் என்பது ஒரு பசுமை இல்ல வாயு. இது கார்பன் டை ஆக்சைடை விட புவி வெப்பமடைதலைக் கணிசமாக அதிகரிக்கச் செய்யும் திறன் கொண்டதாகும். நமது புவி ஒரு சில டிகிரி வெப்பமடைந்தாலும் கூட அது பூமியில் இருக்கும் மனிதர்கள் தொடங்கி பல்வேறு உயிரினங்களையும் அழிக்கும் ஆபத்து இருக்கிறது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இது குறித்து ஸ்வால்பார்ட் ஆய்வாளர் டாக்டர். தாமஸ் பிர்ச்சால் கூறுகையில், "இங்கே அடியில் மீத்தேன் மிகவும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஸ்வால்பார்டில் கீழே உள்ள சில பகுதிகளில் பனி அதிகமாக இருக்கிறது. அவை மீத்தேன் வெளியே வர விடாமல் சீல் செய்கிறது. ஆனால், மலைப்பகுதிகள் குறைவான பனிக்கட்டி தான் இருக்கிறது. அங்கிருந்து மீத்தேன் ஈஸியாக எக்ஸேப் ஆகும் அபாயம் இருக்கிறது. அப்படி ஒருவேளை மீத்தேன் வெளியானால் புவி வெப்ப மயமாதல் அதிகரிக்கும்" என்றார்.
இதில் இப்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஸ்வால்பார்ட் என்ற இந்த பகுதியில் மட்டும் அடியில் மீத்தேன் இருப்பு இல்லை. மாறாக ஆர்க்டிக் பகுதி முழுக்க மீத்தேன் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் இப்போது கருதுகிறார்கள். ஆனால், இப்போது பனி அதிகம் இருப்பதால் மீத்தேன் லீக் ஆவது குறைவாக இருக்கிறது. ஆனால், பனிப்பாறைகள் வேகமாக உருகினால், இங்கிருந்து வெளியாகும் மீத்தேன் அளவு அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெர்மாஃப்ரோஸ்ட்:
பொதுவாக பெர்மாஃப்ரோஸ்ட் தான் பூமிக்கு அடியில் இருக்கும் மீத்தேன் வருவதை ஓரளவுக்குச் சீல் செய்து வைக்கும். பெர்மாஃப்ரோஸ்ட் என்பது குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் தொடர்ந்து உறைந்த நிலையில் இருக்கும் நிலமாகும். புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட மற்ற காரணங்களால் இந்த பெர்மாஃப்ரோஸ்ட் உருகும் நிலையில், அதுவும் மீத்தேன் லீக் ஆகக் காரணமாக அமைந்துவிடும்.
காலநிலை மாற்றம் பூமிக்கு எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது. அதாவது புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பனிக்கட்டிகள், பெர்மாஃப்ரோஸ்ட்கள் உறைகிறது. இவை பூமியில் புதைந்துள்ள பசுமை இல்ல வாயுவான மீத்தேனை லீக் செய்கிறது. அது மேலும் மேலும் பூமியை வெப்பமானதாக மாற்றுகிறது. இப்படி நடந்தால் பல உயிரினங்கள் அழியும் பேராபத்தும் இருக்கவே செய்கிறது.