கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
By : King 24x7 Desk
Update: 2024-12-06 06:20 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.