"மூளையில் சிப்" சிந்திப்பதன் மூலம் கம்ப்யூட்டர் மவுசை நகர்த்த முடியும் - எலான் மாஸ்க்
Update: 2024-02-21 11:47 GMT
மூளையின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூளையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியில் எலான் மஸ்கின் நியூராலின் நிறுவனம் ஈடுபட்டது.
மூளைக்கும் கணினிக்கும் இடையே இன்டர்பேஸ் இணைப்பை உருவாக்கும் வகையிலான ''சிப்''-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி முதல் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
அதாவது, ''பக்கவாதம் பாதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் இந்த சோதனைக்கு ஈடுபடுத்தப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு இந்த முதன் முதலாக அவருக்கு பொருத்தப்பட்டது. மூளையில் ''சிப்'' பொருத்தப்பட்ட மனித நோயாளி தற்போது குணமடைந்து வருகிறார் என்றும் அவரது எண்ணங்களை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மவுசை இயக்குகிறார்'' என்றும் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.