அணைத்து பார்வைகளும் RAFAH மீது - பாலஸ்தீனத்துக்கு ஆதரவு காட்டும் திரிஷா-சமந்தா! நடிகைகள்

Update: 2024-05-29 06:40 GMT

RAFAH 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காசா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் 9வது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் All Eyes On RAFAH என்பது வைரல் ஆகி வரும் நிலையில் நடிகை திரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தங்களின் இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் அமைப்புகள் இடையே தான் தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. இந்த மோதல் தற்போது போராக மாறி உள்ளது. அதாவத கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகனைகளை ஏவியதில் இஸ்ரேல் நாட்டில் 1,400 பேர் பலியாகினர். மேலும் 1000 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணையக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

Advertisement

இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை போராக இஸ்ரேல் அறிவித்து தொடர்ந்து வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்த காசா நகரமும் உருக்கலைந்துவிட்டது. காசா நகரில் உள்ள மக்கள் பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான ரஃபாவில் சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். காசா உள்ளிட்ட போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இங்கு அதிகமான மக்கள் குடிபெயர்ந்துள்ளனர். இதற்கிடையே தான் பல மாதங்களுக்கு பிறகு கடந்த 26ம் தேதி ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல ஏவுகனைகள் இஸ்ரேலின் தொழில்நுட்பத்துடன் இடைமறிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதனால் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

இருப்பினும் கூட ஹமாசின் இந்த தாக்குதல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொதிப்படைய செய்தது. இதையடுத்து அவர் உடனடியாக ரஃபா பகுதியில் பதுங்கி உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து இஸ்ரேல் படைகள் ரஃபா பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது பொதுமக்களின் முகாம் தீப்பற்றி எரிந்தது. ரஃபாவில் உள்ள பொதுமக்கள் முகாம் எரிந்ததில் குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலுக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்துள்ளதோடு, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது. அதோடு சர்வதேச நீதிமன்றமும் போரை நிறுத்த வலியுறுத்தி உள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை கைவிடுவதாக இல்லை. இதற்கிடையே தான் ரஃபாவில் பொதுமக்கள் வசிக்கும் முகாம் எரிந்தது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‛‛பொதுமக்கள் முகாம் மீதான தாக்குதல் என்பது துரதிர்ஷ்டவசமானது'' என தெரிவித்துள்ளார். ஆனாலும் இஸ்ரேல் தொடர்ந்து ஹமாசுக்கு எதிராக காசாவில் போரை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் இஸ்ரேல் தாக்குதலில் ரஃபாவில் பொதுமக்கள் முகாம் எரிந்து குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகி இருப்பதை கண்டித்து இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் கண்டித்துள்ளன. இதுதொடர்பாக பலரும் தங்களின் வலைதள பக்கங்களில் ‛All Eyes On RAFAH' என்பதை பதிவிட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகைகள் திரிஷா, சமந்தா உள்ளிட்டோரும் தங்களின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‛All Eyes On RAFAH' என பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் அனைவரும் ரஃபா மீதான தாக்குதலை கவனிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த பதிவுகள் இருக்கிறது.

Tags:    

Similar News