அமெரிக்கா வரலாறு காணாத நாடு கடத்தலை சந்திக்கும்! புலம்பெயர்ந்தவர்களை அச்சுறுத்தும் டிரம்ப்!

Update: 2024-08-16 10:00 GMT
அமெரிக்கா வரலாறு காணாத நாடு கடத்தலை சந்திக்கும்! புலம்பெயர்ந்தவர்களை அச்சுறுத்தும் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

X தளத்தின் ஸ்பேஸ் நேரலையில், எலான் மஸ்கிற்கு அளித்த நேர்காணலில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நாடு கடத்தலை சந்திக்கும் என்று புலம்பெயர்ந்தவர்களை டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கி இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புலம்பெயர்ந்தவர்கள் குறித்த தனது நிலைப்பாட்டை கூறியுள்ளார்.

முன்னதாக 2016 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டிரம்ப், முக்கிய வாக்குறுதியாக அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தற்காலிகமாக தடை விதிப்பேன் என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

"அதிபராக பதவி ஏற்றவுடன், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கையை தொடங்குவேன்" என கடந்த மாதம் டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News