அதிபர் தேர்தலில் ஜோ பைடன் விலகியதை தொடர்ந்து கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளித்த அமெரிக்கா இந்தியர்கள் !!
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதை தொடர்ந்து ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபரும் இந்தியா வம்சாவழியுமான கமலா ஹாரிஸுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் ஐந்தாம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் இதற்கான பிரச்சாரத்தில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் தற்போதைய அதிபர் ஜோ பைடன் விட எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு பெருகியது.
வயது மூப்பு காரணத்தால் கட்சியில் பைடனுக்கு எதிர்ப்புகள் வந்தன, இதனால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் தனக்கு பதிலாக ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபருமான, இந்திய வம்சாவளியுமான கமலாஹாரிஷை பைடன் பரிந்துரைத்தார். 2021 முதல் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகவும் , முதல் இந்திய வம்சாவழி துணை அதிபராகவும் கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார்.
இவரைத்தான் ஜனநாயக கட்சி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில் கமலஹாரிஷுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன. கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதை அமெரிக்கா இந்தியர்களும் வரவேற்றுள்ளனர். அடுத்த மாதம் 19ஆம் தேதி சிகாகோவில் நடக்க உள்ள ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். கமலஹாரிஷ்க்கு போட்டியாக மூத்த தலைவர்கள் சிலர் இருந்தாலும் கமலஹாரிஷ்க்கு வாய்ப்புகள் அதிகம்.
பைடனின் ஆதரவுக்குப் பிறகு கமலஹாசன் பெட்டியில் கூறியது, அதிபர் பைடனின் ஆதரவை பெற்றதை நான் கவுரவமாக கருதுகிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதை எனது நோக்கம் டிரம்ப் அவரது தீவிரமான திட்டங்களை நான் தோற்கடிப்பேன் என தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்ட அதிபர் தேர்தலில் வெல்லும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்று வரலாற்று சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.