ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை !!

Update: 2024-07-31 06:32 GMT

இஸ்மாயில் ஹனியே

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் நிகழ்ந்துள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்நிலையில் தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியேவின் வீட்டை குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். இதில் மெய்க்காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று தெரிவித்தது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்களும் கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் இஸ்மாயிலின் பேரன் இருவரும் கொல்லப்பட்டனர்.ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிருப்பது ஹமாஸ் அமைப்பினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் தீவிரம் அடையும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

Tags:    

Similar News