தாக்குதலை நடத்த முயற்சித்தால் கடும் விளைவு - ஈரான் எச்சரிக்கை!
பதில் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதலை தொடரப் போவதில்லை; சிரியாவில் ஈரான் தூதரகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடிக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் தூதரகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்காத ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை ஈரான் கடுமையாக சாடியுள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுக்க முற்பட்டால், அமெரிக்கா அதில் பங்கேற்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சிலிடம் இஸ்ரேல் முறையிட்டுள்ளது; ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நாளை மதியம் கூடுகிறது.
சிரியா, ஈராக், ஜோர்டான், எகிப்து லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது.