வங்காளதேச வன்முறை பலி எண்ணிக்கை 105 - ஆக உயர்வு ; ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு !!

Update: 2024-07-20 05:18 GMT

வங்காளதேச வன்முறை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படைவீரர் இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆளும் கட்சியின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் வன்முறை வெடித்தது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் ஆறு மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. போலீசார் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை குவித்தது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில் வங்காளதேசத்தில் வசிக்கும் 15,000 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் 300 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News