மொசாம்பிக் கடற்கரையில் படகு மூழ்கி விபத்து!
Update: 2024-04-10 12:24 GMT
படகு மூழ்கி விபத்து
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் மொசாம்பிக் கடற்கரை வழியாக ஒரு மீன்பிடி படகில் நேற்று சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நோக்கி அந்தப் படகு வந்தபோது எடை தாங்காமல் படகு மூழ்கியுள்ளது.
இதில் அதிலிருந்த 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர்குழந்தைகள். மேலும் சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.