எவரெஸ்ட் சிகரத்தில் அலைமோதும் கூட்டம் !!
உலகின் மிகப்பெரிய உயரமான மலை சிகரம் எவரெஸ்ட் 8 ,1849 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற சிறந்த உடல் தகுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும் ஆனால் தற்போது எவரெஸ்ட் மலை சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம் வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார். இதே போல் சில நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த பூர்ணிமா ஷ்ரேஸ்தா சாதனை படைத்துள்ளார்.
மலையேறும் புகைப்பட பத்திரிகையாளருமான அவர் மே 12 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏரி உள்ளார். எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறுவது மிகவும் சிரமமானது சிலரால் மட்டும்தான் இந்த சாதனையை படைக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது தினமும் இந்த சாதனையை பலர் படைத்து வருகின்றனர்.
இதற்கு காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு எண்ணற்றோர் ஆர்வம் காட்டுவது தான். இதனால் இவர் சிகரத்தில் எண்ணற்ற மக்கள் மலையேறும் காட்சியை சதீஷ் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் விரைவில் எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணியமனம் செய்து விடலாம் என்று அவர் கிண்டல் செய்துள்ளார்.