ஜார்ஜியாவில் 2.5 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி!!
ஜார்ஜியாவில் கமலா ஹாரிஸை விட 2.5 சதவீதம் வாக்குள் அதிகம் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஸ்விங் மாகாணங்கள் எனக் கருதப்படும் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் ஏழு மாகாணங்களில் வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரிசோனா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. வடக்கு கரோலினாவில் டிரம்ப் சுமார் 3.2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. தொடக்கத்தில் சுமார் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார். இதனால் கடும் இழுபறி நீடித்து வந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வித்தியாசம் அதிகரித்தது. இறுதியில் கமலா ஹாரிஸை விட 2.5 சதவீதம் வாக்குள் அதிகம் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். டொனால்டு டிரம்ப் 26,36,905 வாக்குகள் பெற்றார். கமலா ஹாரிஸ் 25,09,360 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 1,27,545 ஆகும். டொனால்டு டிரம்ப் 50.9 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், கமலா ஹாரிஸ் 48.4 சதவீதம் வாக்குகள் பெற்றார். இந்த வெற்றி மூலம் டொனால்டு டிரம்ப் 16 எலக்டோரல் வாக்குகளை பெற்று மொத்தம் 247 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகள் பெற்றுள்ளார்.