சிரியாவில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் !!
சிரியா நாட்டின் ஹமா நகரத்தில் இருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகவும், 3.9 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக சிரிய தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் நலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முன்னதாக இந்த நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.எனினும், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.