பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் 10 கோடி ஃபாலோயர் - வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க் !!!

Update: 2024-07-20 04:55 GMT
பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் 10 கோடி ஃபாலோயர் - வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க் !!!

பிரதமர் மோடி

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

யூடியூப் சமூக வலைதளத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பேஸ்புக், வாட்ஸ்அப் சேனல், இன்ஸ்டாகிராமிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடங்கினார். பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

எக்ஸ் பக்கத்தில் அதிக பேர் ஃபாலோவ் செய்யும் உலகத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடி அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவர் என்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

Tags:    

Similar News