EVEREST சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணம் உயர்வு |கிங் நியூஸ் 24X7
Update: 2025-01-22 10:17 GMT
EVEREST சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணத்தை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் நேபாள அரசு உயர்த்தி உள்ளது. இதுவரை 11 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக இருந்த கட்டணம் இப்போது 15 ஆயிரம் டாலர்களாக உயர்த்தப்படுவதாக நேபாள நாட்டின் சுற்றுலாத்துறை இயக்குநர் ஜெனரல் நாராயண பிரசாத் கூறியுள்ளார். 29,032 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணங்களை நீண்ட ஆய்வுக்கு பின்னர் உயர்த்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.