இன்று முதல் விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்!!
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல இலவச விசா திட்டம் அறிவிக்கப்பட்டது.;
By : King 24x7 Desk
Update: 2024-10-01 12:31 GMT

srilanka
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல இலவச விசா திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.