நீச்சல் உடையில் குளிக்க ஆசைப்பட்ட மனைவிக்கு ரூ.418 கோடியில் தனித்தீவு வாங்கிய கணவர்!!

தனது மனைவி நீச்சல் உடையில் குளிப்பதற்காக அவரது கணவர் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.;

Update: 2024-09-27 11:56 GMT
நீச்சல் உடையில் குளிக்க ஆசைப்பட்ட மனைவிக்கு ரூ.418 கோடியில் தனித்தீவு வாங்கிய கணவர்!!

island

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் (வயது 26). இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி உள்ளார். இந்நிலையில் தனது மனைவி நீச்சல் (பிகினி) உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இதுதொடர்பாக சவுதி அல்நடக் அந்த தனியார் தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார். ஆனால் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி) செலவிட்டதாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News