நாய்கள் தொல்லைக்கு உடனடி நடவடிக்கை - ராதாகிருஷ்ணன் தகவல் !
சென்னை நுங்கம்பாக்கம் பூங்காவில் 5 வயது சிறுமியை கடந்த மே 5ஆம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்தது. தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், '' நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் 23 வகையான நாய்கள் இனப்பெருக்கம் செய்வதோ, இறக்குமதி செய்வதோ, சட்ட விரோதமாக விற்பனை செய்வதோ உள்ளிட்ட தடைகளை மத்திய அரசு கொண்டு வந்தது.
அதற்கான இடைக்கால தடையை பெற்று சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
நாய்க்கடி ஏற்பட்ட ஐந்து வயது குழந்தைக்கு ரேபிஸ் நோய் தொற்று உள்ளது என்பது தவறான தகவல், அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது;
அந்த குழந்தைக்கு இன்று மதியம் அறுவை சிகிச்சை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.