ஈரானில் வர்த்தக நடவடிக்கையை கைப்பற்றிய இந்தியா..!.. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா !
ஈரானின் சபஹர் துறைமுக மேம்பாட்டு திட்டத்தில் ஷாஹித்-பெஹெஷ்டி முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளிநாட்டு துறைமுக நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.
ஈரானின் மிகப் பெரிய துறைமுகமான சபாகர் துறைமுகத்தின் ஒரு முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா இயக்குவதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில் இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் மற்றும் ஈரானின் துறைமுகம், கடல்சார் அமைப்பு ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது ஈரானுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள் குறித்த கேள்விக்கு, பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.