இஸ்ரேலுக்கு எதிரான ஆயுத ஏற்றுமதி தடைக்கு இந்தியா எதிர்ப்பு; அதானி குழுமமே காரணம்!

Update: 2024-04-18 11:40 GMT

இந்தியா - இஸ்ரேல் - அதானி 

இஸ்ரேலுக்கு எதிரான ஆயுத ஏற்றுமதி தடைக்கு இந்தியா எதிர்ப்பு; அதானி குழுமமே காரணம்?

  • கடந்த 5-ம் தேதி காசாவில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதித் தடை விதிக்கக் கோரும் தீர்மானங்கள் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேறிய நிலையில், அந்த இரு தீர்மானங்களையும் இந்தியா புறக்கணித்தது.
  • கடந்த 2023 டிசம்பரில் ஐநா பொதுச் சபையில் காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவளித்த இந்தியா, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
  • இந்தியாவின் இந்த முடிவுக்கு அதானி குழுமம் இஸ்ரேலுக்கு ராணுவ ட்ரோன்களை ஏற்றுமதி செய்து வருவதே காரணமாக இருக்கலாம் என The Wire செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
  • கடந்த பிப்ரவரியில், 20-க்கும் மேற்பட்ட Hermes 900 ட்ரோன்களை அதானி குழுமம் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ததாக செய்திகள் வெளியாகின.
  • இந்தியா ஐநா சபையில் எடுத்துள்ள இந்த சமீபத்திய முடிவு இஸ்ரேலுக்கு மறைமுகமாக ராணுவ ஆதரவை வழங்குவதை குறிப்பதாக, The Wire குற்றம்சாட்டியுள்ளது.
Tags:    

Similar News