கமலா ஹாரிஸ் கருப்பரா அல்லது இந்தியரா? - இனவெறி கேள்வியை எழுப்பி டொனால்ட் டிரம்ப் கடும் தாக்கு!

Update: 2024-08-04 00:30 GMT

டொனால்ட் டிரம்ப்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிகாகோ நகரில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்க மாநாட்டில் பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், கமலா ஹாரிஸ் மீது இனவெறி கருத்தினை தெரிவித்துள்ளார்.

வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிகாகோவில் நடந்த கறுப்பின பத்திரிகையாளர்களின் தேசிய சங்க மாநாட்டில் பேசிய டொனால்ட் டிரம்ப், '' கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்; அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்துள்ளார்.

சமீப ஆண்டுகாலமாக, அரசியலுக்காகவே கமலா ஹாரிஸ் தான் கருப்பராக அறியப்பட விரும்புகிறார்.

இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். ஆப்பிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான் தான்'' என்று தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News