இஸ்ரேல் ராணுவ உளவு தலைவர் ராஜினாமா!
Update: 2024-04-23 10:02 GMT
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் தாக்குதலை கணிக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். மேஜர் ஜெனரல் அகரான் ஹலிவா ராணுவத்திற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், தன்னுடைய தலைமையில் உள்ள உளவுப்பிரிவு, ஹமாஸ் தாக்குதல் குறித்த முறையான தகவல்களை அளிக்கவில்லை என கூறியுள்ளார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் தனக்கு கருப்பு நாளாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வேறு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, உளவுப்பிரிவு தலைவராக அவர் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.