இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா வருகை ; பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டம் - 200 போராட்டகாரர்கள் கைது !!

Update: 2024-07-26 06:13 GMT
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா வருகை ; பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டம் - 200 போராட்டகாரர்கள் கைது !!

இஸ்ரேல் பிரதமர் 

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இஸ்ரேல் காசா நகரின் மீது கடந்த ஒன்பது மாதங்களாக போர் நடத்தி தாக்குதலி ஈடுபட்டு வருகிறது. இதில் 395 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டனர். 90.000 மக்கள் படுகாயம் அடைந்தனர். பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜோ பைடர மற்றும் அமெரிக்கா தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று முன்தினம் அமெரிக்கா வந்துள்ளார்.

வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் தலைநகர் வாஷிங்க்டன் யூனியன் கட்டிடத்தின் முன் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலஸ்தீன கொடியை கையில் ஏந்திய படி ஊர்வலமாக வந்து நேதன்யாகுவுக்கு எதிராக கோஷமிட்டு கைது செய்யுங்கள் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள் நேதன்யாகுவும் நீ உள்ளே ஒளிந்து கொள்ள முடியாது.

நீ செய்வது இனப்படுகொலை என்று கோஷம் எழுப்பினர். சில போராட்டக்காரர்கள் நெதன்யாகு நகருக்குள் நுழையும் வழியிலும் மரியல் செய்தனர். நகரின் சுவர்களிலும் கொலம்பஸ் உள்ளிட்டவர்களின் சிலைகளிலும் கிராஃபிட்டி வரைந்து தங்களின் எதிர்ப்பைப் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். கைகளில் ரத்தத்துடன் நிற்கும் படங்களை போராட்டத்தில் பங்கேற்க கலைஞர்கள் வரைந்தனர். அமெரிக்கா கொடியையும் நிதன்யாகுவின் உருவ பொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்து பரபரப்பை ஏற்படுத்தியதால் 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் கமலாஹரிஸ் நெதன்யாகுவை சந்தித்து பேசின நிலையில் வெள்ளை மாளிகைக்கு வலியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் அமெரிக்கா கொடி எரித்தது நாட்டுப்பற்றின்மையை காட்டுவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த போராட்டங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News