நள்ளிரவில் குலுங்கி தரைமட்டமான வீடுகள்... 116 பேர் பலியான சோகம்!!

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் முதற்கட்டமாக 116 பேர் பலியானதாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-12-19 07:16 GMT

China earthquake

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் உள்ள கன்சு மற்றும் கிங்காய் மாகாணத்தில் நள்ளிரவில் திடீரென வீடுகள் குலுங்கின. அதனால் அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வீட்டிற்கு வெளியே ஓடினர். நில விநாடிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் பலர் சிக்கினர். சில பகுதிகளில் மின் இணைப்பு தடைப்பட்டதுடன், தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் 116 பேர் உயிரிழந்ததாகவும், 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் கன்சு மாகாணத்தில் மட்டும் 105 பேர் உயிரிழந்துள்ளனர். கிங்காய் மாகாணத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருப்பதாகவும், அதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், உயிர்ச்சேதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இரு மாகாணங்களிலும் இதுவரை 5000 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. 

நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் ஓடி வந்து தஞ்சமடைந்ததால், பரபரப்பு நிலவி வருகிறது. இதேபோல், வடமேற்கு பகுதியில் உள்ள சின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருப்பதால் இதுவரை சேத விவரம் வெளிவர முடியவில்லை. 

இதற்கிடையே நிலநடுக்கத்தில் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி  பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தேவையான உதவிகள் செய்து தரப்பப்படும் என அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News