அதிபர் தேர்தலில் விலகிக்கொள்வதாக ஜோ பைடன் தெரிவிப்பு - பதவிக்கு களம் காணும் கமலா ஹாரிஸ் !!

Update: 2024-07-22 05:59 GMT

ஜோ பைடன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார்.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வென்ஸ் அறிவிக்கப்பட்டார். அதிபர் தேர்தலில் களம் காணும் ஜோ பைடனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் இந்த விஷயம் அம்பலமானது.

டிரம்புடன் பேசும்போது தடுமாறிய பைடன் அதன் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று அழைத்தார். துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை ட்ரம்ப் என்று அழைத்தார். இந்த சம்பவங்கள் அதிதிருப்தியை ஏற்படுத்தியது. ஜோபைடனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவை ஏற்படுவதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக இது தொடர்பான எக்ஸ் தளம் பதிவில் "ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம்.

என்றும் இருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் நாம் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன். இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்க்கு என் முழு ஆதரவு ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயக வாதிகள் ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News