ஜூன் 25-ந் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு!

Update: 2024-07-13 11:20 GMT

மத்திய அரசு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25-ந் தேதி, அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அரசிதழில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்போது இருந்த மத்திய அரசு முற்றிலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது. இந்திய மக்கள், அத்துமீறல்களுக்கும், அராஜகங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

Advertisement

அரசியல் சாசனம் மீதும், அதன் வலிமை மீதும் இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, நெருக்கடி நிலை காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து போராடியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25-ந் தேதியை ‘அரசியல் சாசன படுகொலை நாள்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.எதிர்காலத்தில் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை எந்த விதத்திலும் ஆதரிக்க போவதில்லை என்று உறுதி பூணவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News