புதினுடன் கைகோர்த்த கிம் ஜாங் உன்!

Update: 2024-06-19 06:22 GMT

புதின் - கிம் ஜாங் உன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  தலைநகர் பியாங்யாங்கில் வந்து இறங்கிய புடினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டித் தழுவி வரவேற்றார்.

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் புதினின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே வடகொரிய பயணயம் அமையும் என கூறப்படுகிறது. வடகொரியாவுக்கு புறப்படுவதற்கு முன், உக்ரைனுக்கு எதிரான போரில், வடகொரியா தங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு புதின் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News