கிம் ஜாங் உன்னின் 12 வயது மகள் - வடகொரியா அடுத்த அதிபரா ??
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அடுத்த அரசியல் வாரிசாக அவரது மகள் ஜு ஏ ( வயது 12) வரலாம் என தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் பொது இடங்களில் தன் மகளுடனேயே தோன்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன. வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
அவர் உடல் எடை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார் என்றும், அவரது அதிகாரிகள் வெளிநாட்டில் புதிய மருந்துகளை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்றும் தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்தது. அவரது உடல் எடை 140 கிலோவாக அதிகரித்துள்ளது.
தனது உடல் நிலை மோசமாகிக்கொண்டே வருவதால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிபர் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தன் 12 வயது மகள் ஜு ஏ என்பவரை நாட்டின் அடுத்த அதிபராக்கிட திட்டமிட்டு இப்போதே பயிற்சி அளித்து வருகிறார். பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.