தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

Update: 2024-01-02 09:21 GMT

 லீ ஜே மியுங்

தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், அந்நாட்டின் துறைமுக நகரமான பூசானில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கக்தியால் குத்தப்பட்டார். தென்கொரியா நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் லி ஜி மியங். இவர் இன்று காலை அந்நாட்டின் புசன் மாகாணம் ஹடியொக் தீவில் புதிதாக கட்டப்பட்டுவரும் விமான நிலையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், லி ஜி மியங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, லி ஜி மியங்கின் ஆதரவாளர்போல் வந்த நபர் ஆட்டோகிராப் (கையெழுத்து) வாங்குவதுபோல் அவரை நெருங்கியுள்ளார். திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிர்க்கட்சி தலைவர் லி ஜி மியங்கின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழும் லீக்கு மக்கள் உதவி செய்தனர். அதில் ஒருவர் தனது கைக்குட்டையால் அவரின் கழுத்தைக் அழுத்திப் பிடிப்பது உள்ளிட்ட காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Tags:    

Similar News